Monday, July 27, 2009

கம்பளத்து நாயக்கர் - தேவராட்டம் - வழிபாட்டு முறைகள்

Poovai's essay புது விசை இணையத்தில், இந்த கட்டுரையை காண நேர்ந்தது. ஒரு கள ஆய்வின் மூலமும், அந்த களத்தின் மக்களின் வழிபாட்டு முறையின் மூலமும் கம்பளத்தாரின் பண்பாட்டை அறியும் முயற்சியாக இக்கட்டுரை
அமைகிறது.
இவர்களின் பூர்வீகம் என்று அறியும்போது கி.ரா. மற்றும் பா. செயப்பிரகாசம் நயக்கர்கர், ரெட்டியார் உயர்சாதி மக்கள் ஆந்திரநாட்டில் இருந்து வந்தனர் என்பதை கோபல்லகிராமம், தெக்கத்தி ஆத்மாக்கள் படைப்புகள் மூலம் அறிய முடிகின்றது. அதுபோல் கம்பளத்து நாயக்கரின் பூர்வீகம் இங்கு இல்லை என்பதைத் தெளிவாக அறியலாம்.

இவர் கூறுகின்ற "கோபல்ல கிராமம்" படித்திருக்கிறேன். சுவையான நாவல். எப்படி தெலுங்கு பேசுபவர்கள், பஞ்ச காலத்தின் போது, இடம் பெயர்ந்து, தமிழகம் வந்து, காடு திருத்தி, தமது வாழ்க்கையை அமைத்துக்கொண்டார்கள் என்று எழுதியிருக்கிறார். அவர், கம்மவார் நாயக்கர்களைப் பற்றி பெரிதும் எழுதியிருக்கிறார். தெக்கத்தி ஆத்மாக்கள் படித்ததில்லை.

மேலும் ஜெயமோகனின் சில வரலாற்று நூல்கள் - 3 -மதுரை நாயக்கர் வரலாறு (அ.கி.பரந்தாமனார் எம்.ஏ) கட்டுரையிலும் சில தகவல்கள் அடங்கியுள்ளது.


"கம்பளத்து நாயக்கர்களின் வீட்டுக் கூரையானது கூம்பு வடிவத்தில் கம்மந்தட்டையினால் வேயப்பட்டுள்ளது."


எங்கள் ஊரில் இந்த மாதிரி வீடுகள் இருப்பதில்லை. தேனி, வத்தலக்குண்டு பகுதியில்தான் அதிகம் பார்த்திருக்கிறேன். கூம்பு வடிவ வீட்டமைப்பின் அறிவியல் தொழில்நுட்ப வசதி அதிகம் தெரியவில்லை. ஆந்திராவில் சில கிராமங்களிலும் சீனாவிலும்தான் இந்த மாதிரி வீடுகளை அதிகம் பார்த்திருக்கிறேன்.






5 comments:

  1. கம்பளத்தார் பஞ்சத்தில் வந்தவர்கள் அல்ல. அவர்கள் 1300 முதல் ஆந்திராவின் யாதவ அரசின் வீரர்கள். அதன்பின் விஜயநகரப்பேரரசின் வீரர்கள். 1378ல் சுல்தான் சிக்கந்தர் ஷாவை விஜயநகர மன்னர் குமாரகம்பணர் வென்று மதுரையைக் கைப்பற்றியபோது கூடவே வந்தார்கள். இங்கே அவர்களின் பாளையங்கள் அப்போதே அமைந்துவிட்டன.

    நல்ல பல ஆய்வுகள் உள்ளன. காவல்கோட்டம்ந் ஆவலின் முதல்பகுதியில் ஏராளமான தகவல்கள் உள்ளன

    ஜெயமோகன்

    ReplyDelete
  2. kambalathar are great person......
    but dont have such a awarness.......
    so we give awarness to our people and we only incress our life style

    ReplyDelete
  3. In the past we are kings,
    ok for howmany days we can say this.
    To tell the same story to our children we should work hard and get world class education.
    Plse atleast hereafter give more importance for education and try to get admission for our brothers and sisters in IIT'S AND IIM'S or build new schools and colleges with world standard Education by own.
    bye....bye....
    plse give ur comments....

    ReplyDelete
  4. It will happen and it is happening. Otherwise, we will not be discussing this in a blog post :-)

    Same time, It is important to know one's roots and history, not to get some pride, but to understand what our values are and what our weakness are.

    Not only our pride, we should also look at what we lacked. See Leena Manimekalai's documentary palipeetam.

    I have heard many stories good and bad. But, nowadays, it is no longer they are spread over speech. Where were our strengths of war strategies gone? where were our strengths of mythical magics that was only available to us? Where were our songs? Where were our dances? only Devarattam persists over ages. Do we still speak the same telugu that our forefathers spoke? If we are about to forget them, atleast we should document them either in Literary or documentaries.

    ReplyDelete
  5. அன்புள்ள ஜெமோ,

    பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி. நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை, நீங்கள் பின்னூட்டம் இடுவீர்கள் என்று.

    உங்களின் "இன்றைய காந்தி" மற்றும் "புதிய காலம்" தற்போது படித்து வருகிறேன்.

    நன்றி

    ReplyDelete

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License.