A video documentary showing Rajakambalam typical lives in the village Kundalanayakkanpatti. Courtesy Vijay TV.
Saturday, June 4, 2011
குண்டலநாயக்கன்பட்டி - விஜய் டிவி குறும்படம்
Monday, January 25, 2010
Monday, July 27, 2009
கம்பளத்து நாயக்கர் - தேவராட்டம் - வழிபாட்டு முறைகள்
Poovai's essay புது விசை இணையத்தில், இந்த கட்டுரையை காண நேர்ந்தது. ஒரு கள ஆய்வின் மூலமும், அந்த களத்தின் மக்களின் வழிபாட்டு முறையின் மூலமும் கம்பளத்தாரின் பண்பாட்டை அறியும் முயற்சியாக இக்கட்டுரை
அமைகிறது.இவர்களின் பூர்வீகம் என்று அறியும்போது கி.ரா. மற்றும் பா. செயப்பிரகாசம் நயக்கர்கர், ரெட்டியார் உயர்சாதி மக்கள் ஆந்திரநாட்டில் இருந்து வந்தனர் என்பதை கோபல்லகிராமம், தெக்கத்தி ஆத்மாக்கள் படைப்புகள் மூலம் அறிய முடிகின்றது. அதுபோல் கம்பளத்து நாயக்கரின் பூர்வீகம் இங்கு இல்லை என்பதைத் தெளிவாக அறியலாம்.
இவர் கூறுகின்ற "கோபல்ல கிராமம்" படித்திருக்கிறேன். சுவையான நாவல். எப்படி தெலுங்கு பேசுபவர்கள், பஞ்ச காலத்தின் போது, இடம் பெயர்ந்து, தமிழகம் வந்து, காடு திருத்தி, தமது வாழ்க்கையை அமைத்துக்கொண்டார்கள் என்று எழுதியிருக்கிறார். அவர், கம்மவார் நாயக்கர்களைப் பற்றி பெரிதும் எழுதியிருக்கிறார். தெக்கத்தி ஆத்மாக்கள் படித்ததில்லை.
மேலும் ஜெயமோகனின் சில வரலாற்று நூல்கள் - 3 -மதுரை நாயக்கர் வரலாறு (அ.கி.பரந்தாமனார் எம்.ஏ) கட்டுரையிலும் சில தகவல்கள் அடங்கியுள்ளது.
"கம்பளத்து நாயக்கர்களின் வீட்டுக் கூரையானது கூம்பு வடிவத்தில் கம்மந்தட்டையினால் வேயப்பட்டுள்ளது."
எங்கள் ஊரில் இந்த மாதிரி வீடுகள் இருப்பதில்லை. தேனி, வத்தலக்குண்டு பகுதியில்தான் அதிகம் பார்த்திருக்கிறேன். கூம்பு வடிவ வீட்டமைப்பின் அறிவியல் தொழில்நுட்ப வசதி அதிகம் தெரியவில்லை. ஆந்திராவில் சில கிராமங்களிலும் சீனாவிலும்தான் இந்த மாதிரி வீடுகளை அதிகம் பார்த்திருக்கிறேன்.
நேர் சுட்டம்
இந்த குலத்தினரிடையே, திருமணப்பொருத்தம் பார்க்கும் போது, நேர் சுட்டம் என்ற ஒரு முறை பார்ர்கப்படுகிறது. இதன்படி, ஒரு குலத்தவர், அவருக்கு நேர் சுட்டம் இருக்கும் குலத்தினருடன்தான் சம்பந்தம் செய்ய வேண்டும் என்ற கருத்து நிலவுகிறது.
தற்போது, வேறு சுட்டத்தினருடனும் திருமணம் செய்வது நடக்கத்தான் செய்கிறது.
தற்போது, வேறு சுட்டத்தினருடனும் திருமணம் செய்வது நடக்கத்தான் செய்கிறது.
இர்ரி மாது | கொடையானி பொம்மு சில்ல |
பால சித்து | குஜ்ஜ பொம்மு |
கம்பராஜு | எரமாசி சின்ன பொம்மு |
மங்கராஜு | கலிமுசோமு |
பல்லகதொப்பு நூட்ட குமாரலு |
குலதெய்வங்கள்
இர்ரி காணி | கெண்டு காட்டம்மா |
கொடையானி பொம்மு | பேரவாடி அக்ககாரு |
பாலவநாகு | பல்லகொண்ட கண்ணகாரு |
குஜ்ஜபொம்மு | வெல்லக்குஞ்சர பொம்மையசாமி |
கம்பராஜு | ரங்கநாதர் |
எரமாசி | காமாட்சியம்மன் |
மங்கராஜு | கெட்டவைய்ய |
கலிமிசோமு | டத்தலூட்டி கண்ணகாரு |
பல்லகாணி | லகுவம்மா |
குரிமாசி | பைட்டம்ம |
சில்லண்ண | சீப்பாலம்ம |
ராஜகம்பளத்தாரின் குலங்கள்
ராஜகம்பளத்தார்களின் உட்பிரிவுகள் 10 வீட்டு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. எவ்வாறு இவ்வகைகளைப் பிரித்தார்கள், எந்த கால கட்டத்தில் இவ்வாறு பிரிக்கப்பட்டன என்ற விவரம் தெரியவில்லை. இவைகள் எனது உறவினர்களிடமிருந்த ஒரு தாளில் குறிக்கப்பட்டு இருந்தன. அது மிகவும் பழசாகவும், நான் எனது அலமாரியை கலைத்துக்கொண்டிருந்த போது கண்டுபிடிக்கப்பட்டது. இணயத்தில் ஏற்றி வைப்பது அழியாமல் இருக்கும் என நினைக்கிறேன். இவை பெரும்பாலும் திருமணப் பொருத்தம் பார்க்கும் போதுதான் பயன்படுத்தப்படுகிறது. இவர்கள் பெரும்பாலும், குறிப்பிட்ட உட்பிரிவுகளுக்குள்ளேயே திருமணம் செய்கிறார்கள்.
இர்ரி வீட்டு வகை
உட்பிரிவுகள் தெரியவில்லை
குரிமாசி வீட்டு வகை
இர்ரி வீட்டு வகை
- கண்ணடிர்ரி
- தாத்திர்ரி
- போற்றிர்ரி
- கூசமிர்ரி
- பாசமிர்ரி
- பந்திர்ரி
- ஏமிர்ரி
- எனுமிர்ரி
- நாயிர்ரி
- குண்டானி கொடையானி
- கோட்டண்ண கொடையானி
- பிதுரண்ண கொடையானி
- புவ்வுல கொடையானி
- உக்கம கொடையானி
- திம்மிசி கொடையானி
- சில்ல கொடையானி
- முட பாலம்
- உண்டாடி பாலம்
- கட்டாறி பாலம்
- கெங்கிசி பாலம்
- காட்டேரி பாலம்
- சாம பாலம்
- சல்லூறு பாலம்
- தூணாக்கோல் பாலம்
- மல்ல பாலம்
- குரி பாலம்
- எகநாகி பாலம்
- திகநாகி பாலம்
- போட பொம்மு
- பொட்டக பொம்மு
- பீலி பொம்மு
- பிக்கா பொம்மு
- சல்லி பொம்மு
- குல்லி பொம்மு
- எரமிசி பொம்மு
- எரகினி பொம்மு
- குந்திலி பொம்மு
- குலகட்ட பொம்மு
- பங்கு பொம்மு
- பங்காரு பொம்மு
- கசிகிலி பொம்மு
- குசிகிலி பொம்மு
- கோனண்ண
- கெத்தண்ண
- சில் பொம்மு
- எரமாசி
- கமண்ண
- பீரண்ண
- சக்கிடண்ண
- கொடுக்கண்ண
- சருக்கண்ண
- காட்டண்ண
- மேக்கலண்ண
- நல்லிமண்ண
உட்பிரிவுகள் தெரியவில்லை
குரிமாசி வீட்டு வகை
- பெத்தொட்டி காட்டையா
- சிவகாணி பாலப்பா
- வந்த பாலமுத்து
- எரசில்ல
- நலசில்ல
- பூத்தமசில்ல
- பூத்தனாகாச்சி சில்லா
- நாரமுத்து சில்ல
- தும்பி சில்ல
- கோண சில்ல
- உப்பிடி சில்ல
- பொந்து சில்ல
- கொடை சில்லா
Subscribe to:
Posts (Atom)