Poovai's essay புது விசை இணையத்தில், இந்த கட்டுரையை காண நேர்ந்தது. ஒரு கள ஆய்வின் மூலமும், அந்த களத்தின் மக்களின் வழிபாட்டு முறையின் மூலமும் கம்பளத்தாரின் பண்பாட்டை அறியும் முயற்சியாக இக்கட்டுரை
அமைகிறது.இவர்களின் பூர்வீகம் என்று அறியும்போது கி.ரா. மற்றும் பா. செயப்பிரகாசம் நயக்கர்கர், ரெட்டியார் உயர்சாதி மக்கள் ஆந்திரநாட்டில் இருந்து வந்தனர் என்பதை கோபல்லகிராமம், தெக்கத்தி ஆத்மாக்கள் படைப்புகள் மூலம் அறிய முடிகின்றது. அதுபோல் கம்பளத்து நாயக்கரின் பூர்வீகம் இங்கு இல்லை என்பதைத் தெளிவாக அறியலாம்.
இவர் கூறுகின்ற "கோபல்ல கிராமம்" படித்திருக்கிறேன். சுவையான நாவல். எப்படி தெலுங்கு பேசுபவர்கள், பஞ்ச காலத்தின் போது, இடம் பெயர்ந்து, தமிழகம் வந்து, காடு திருத்தி, தமது வாழ்க்கையை அமைத்துக்கொண்டார்கள் என்று எழுதியிருக்கிறார். அவர், கம்மவார் நாயக்கர்களைப் பற்றி பெரிதும் எழுதியிருக்கிறார். தெக்கத்தி ஆத்மாக்கள் படித்ததில்லை.
மேலும் ஜெயமோகனின் சில வரலாற்று நூல்கள் - 3 -மதுரை நாயக்கர் வரலாறு (அ.கி.பரந்தாமனார் எம்.ஏ) கட்டுரையிலும் சில தகவல்கள் அடங்கியுள்ளது.
"கம்பளத்து நாயக்கர்களின் வீட்டுக் கூரையானது கூம்பு வடிவத்தில் கம்மந்தட்டையினால் வேயப்பட்டுள்ளது."
எங்கள் ஊரில் இந்த மாதிரி வீடுகள் இருப்பதில்லை. தேனி, வத்தலக்குண்டு பகுதியில்தான் அதிகம் பார்த்திருக்கிறேன். கூம்பு வடிவ வீட்டமைப்பின் அறிவியல் தொழில்நுட்ப வசதி அதிகம் தெரியவில்லை. ஆந்திராவில் சில கிராமங்களிலும் சீனாவிலும்தான் இந்த மாதிரி வீடுகளை அதிகம் பார்த்திருக்கிறேன்.